உதவி பேராசிரியை பணியிடை நீக்கம்

மறைமலைநகர்:'ஆப்பரேஷன்' சிந்துார் வாயிலாக நேற்று முன்தினம் இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இந்நிலையில், இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து, சமூக வலைதளங்களில் காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த லோரா என்பவர், கருத்து பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து சிலர், கல்லுாரி நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர். இந்நிலையில், லோராவை பணியிடை நீக்கம் செய்து, கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

லோராவின் கருத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளான நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Advertisement