லாரி மோதி பெண் பலி

ஓசூர், கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், மாலுார் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி,52; விவசாயி. இவரது மனைவி லலிதாம்மா, 48. இவர்கள் இருவரும், ஹோண்டா சைன் பைக்கில், நேற்று முன்தினம் மாலுாரில் இருந்து ஓசூர் நோக்கி வந்தனர். நாராயணசாமி பைக்கை ஓட்டினார். ஓசூரில் உள்ள பாகலுார் சாலையில், தனியார் காதி வஸ்த்ராலயா கடை அருகே மதியம், 1:00 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இந்த விபத்தில் லலிதாம்மா படுகாயமடைந்து, ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். நாராயணசாமி காயமின்றி உயிர் தப்பினார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

ஓசூரில் உள்ள பாகலுார் சாலை, குண்டும், குழியுமாக மோசமாக உள்ளது. இச்சாலையை, 2 கி.மீ., துாரம் புதிதாக அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் ஒப்புதல் தாமதமாகி வருவதாக கூறி, தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலை பணியை துவங்காமல் உள்ளது. அதனால், விபத்துகள் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement