ஜாமினில் வந்தவர் கத்தியுடன் கைது

அரியாங்குப்பம்: எதிரியை கொலை செய்வதற்காக வீட்டில் கத்தியை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வீராம்பட்டினம் பகுதியில், வீட்டில் கத்தியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதையடுத்து, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன், சஞ்சீவி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, கத்தி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அவரை கைது செய்து, அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார், விசாரணை நடத்தியதில், வீராம்பட்டினத்தை சேர்ந்த மதன்ராஜ், 33, என்பதும், எதிரியை கொலை செய்ய கத்தியை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இவர், அரியாங்குப்பத்தில் நடந்த கொலை வழக்கில் சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளியில் வந்துள்ளார். மேலும், இவர் மீது ரவுடிசம் செய்தல், கத்தியை காட்டி மிரட்டுதல் ஆகிய வழக்குகள் அரியாங்குப்பம் போலீசில் உள்ளது.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு