மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்...அதிகரிப்பு பிளஸ் 2 தேர்வில் 88.12 சதவீதம் பேர் 'பாஸ்'

சென்னை :சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 88.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநகராட்சி தொடர்ந்து செயல்படுத்திய பல்வேறு சலுகைகளால், கடந்தாண்டைவிட, 0.99 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், மாணவர்களை விட மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளதாக, மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னையில் 51 அரசு, 35 மாநகராட்சி, நான்கு சுயநிதி மற்றும் 493 தனியார் பள்ளிகள் என, மொத்தம் 583 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம், மாணவ - மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இதன் தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2,328 மாணவர்கள்; 3,059 மாணவியர் என, 5,387 பேர் பொதுத்தேர்வை எழுதினர். இதில் 1,949 மாணவர்கள், 2,798 மாணவியர் என, 4,747 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, 88.12 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்தாண்டில், 87.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்தாண்டைவிட, 0.99 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக, 551 - 600 மதிப்பெண்கள் வரை 65 மாணவர்கள் பெற்றுள்ளனர். 501 - 550 மதிப்பெண் வரை 247 மாணவர்களும், 451 - 500 மதிப்பெண்கள் வரை 541 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
இதில், சென்னை, ஷெனாய் நகர் புல்லா அவென்யூ மாநகராட்சி பள்ளி மாணவி வி.கீர்த்திகா, 591 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், பெரம்பூர் எம்.எச்., சாலை பள்ளி மாணவியர் வி.மமதா, 588; பி.பூஜா, 583; கே.ரோஷினி, 583 மதிப்பெண்கள் பெற்று, அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.
இவர்கள் நான்கு பேரும், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல், சென்னை மாநகராட்சி பள்ளியில் சேர்ந்தவர்கள்.
சென்னை மாநகராட்சி பள்ளியில், தமிழ், ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மாநகராட்சி வழங்கி வருகிறது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் மற்றும் சிற்றுண்டிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட்டனர்.
மேலும், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்களே பல்வேறு வகையில் உதவிகள் செய்து வருவதால், மாநகராட்சி பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் மாணவ - மாணவியர் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும், தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூந்தமல்லியில், பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120 மாணவர்கள் பயில்கின்றனர்.
இப்பள்ளி மாணவர் ஆனந்த், மாநில பாடத்திட்டத்தில் படித்து, தமிழகத்தில் முதல் முறையாக, கணினி வழியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினார். வழிகாட்டி என்ற ஸ்கிரைப் வினாக்களை படித்து, ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு செய்து ஆனந்த் தேர்வு எழுதினார்.
இதில், 486 மதிப்பெண் பெற்று, ஆனந்த் தேர்ச்சி பெற்றார். இந்த பள்ளியில் பிளல் 2 தேர்வு எழுதிய 17 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதால், இந்த பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.
மாணவியரே அதிகம்தேர்ச்சி சதவீதம்மாணவியர் 91.46மாணவர்கள் 83.70
மாணவியரே அதிகம்தேர்ச்சி சதவீதம்மாணவியர் 91.46மாணவர்கள் 83.70
மாணவியரே அதிகம்தேர்ச்சி சதவீதம்மாணவியர் 91.46மாணவர்கள் 83.70
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு