நார்ட்டன் பிராண்ட் பைக்குகள் விரைவில் டி.வி.எஸ்., அறிமுகம்

சென்னை:டி.வி.எஸ்., துணை நிறுவனமான நார்ட்டன் மோட்டார் சைக்கிள்ஸ் பிராண்டின் பைக்குகளை, நடப்பாண்டிற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரிட்டனின் நார்ட்டன் பிராண்டை 2020ம் ஆண்டில், 153 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம்.

இந்தியா - பிரிட்டன் இடையே, தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், வாகன இறக்குமதி வரி 100 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, பிரீமியம் நார்ட்டன் பைக்குகளை இறக்குமதி முறையில் உள்நாட்டில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நார்ட்டன் பைக்குகளின் உற்பத்தி, 2025க்குள் இந்தியாவில் துவங்கும் என டி.வி.எஸ்., நிறுவனம் முன்பே அறிவித்து இருந்தது. அதாவது, 350 - 450 சி.சி., வரையிலான இன்ஜின் திறன் கொண்ட பைக்குகள் உள்நாட்டில் உற்பத்தியாக உள்ளன. 2027க்குள் ஆறு பைக்குகளை உள்நாட்டில் அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement