பெத்தி செமினார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி: பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற சாதனை செய்ததற்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
புதுச்சேரி பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிக்கும் 9 மாணவர்கள் ஏற்கனவே உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற சாதனை செய்து வருகின்றனர். பள்ளி மாணவர் சிவனேஷ், 50 மருத்துவ தாவரங்களின் பெயர்களை கண்டறிந்து 52 வினாடிகளில் கூறினார். மாணவர்கள், கலைராஜ், கிரித்திக்கேஷ், ஆல்வார், ஹெரிக், ரக் ஷன், விஷ்ரூத், அக்ஷாந்த், ஆதிக்ஸ்ரீராம், பிரஜோத், கார்த்தி ஆகிய மாணவர்கள் பல்வேறு சாதனை செய்துள்ளனர்.
இவர்களை ஊக்குவிக்கும் வகையில், பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக எதிர்க்கட்சி தலைவர் சிவா, சாதனை புத்தகத்தில் இடம்பெற ஊக்குவித்து மாணவர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
பிளஸ் 2 தேர்வு: இரு கைகள் இழந்த அரசு பள்ளி மாணவன் 471 மதிப்பெண் பெற்று சாதனை
-
கி.கிரி மாவட்டத்தில் 13 அரசு பள்ளிகள் 54 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
-
தர்மபுரியில் 15 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
-
விபத்தில் மேலும் ஒரு பெண் பலி
-
பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு
-
'ஓய்வு' அதிகாரி வீட்டில் நகை திருட்டு தம்பதியர் உள்பட 5 பேர் கைது