பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அடுத்த, பாளேதோட்டம், கரடானூரைச் சேர்ந்தவர் முருகன், 55. இவர் நேற்று முன்தினம் மாலை தன் விவசாய நிலத்தில் விவசாய பணி செய்து கொண்டிருந்தபோது,

நாகப்பாம்பு கடித்தது. முருகன் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement