மானிய விலையில் சோளம் விதை

உடுமலை: கோடை மழை பெய்து வரும் நிலையில், வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைப்பதற்கு கோ -32 ரக சோளம் வழங்கப்படுகிறது.

உடுமலை பகுதிகளில், கோடை மழை பெய்து வரும் நிலையில், சோளம் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்பில், விதைப்பதற்கு தேவையான கோ-32 ரக சோளம், மானிய விலையில் வழங்கப்படுகிறது.

மாடுகளுக்கு தீவனமாக, அடர் சோள பயிருக்கு ஏற்ற ரகமாகும். இந்த கோ-32 ரக சோளம் விதை, குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையத்தில், தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுமாறு, 'வேளாண் அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement