மாணவியை பலாத்காரம் செய்தவருக்கு '20 ஆண்டு'
கொப்பால்: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கொப்பால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கொப்பால் மாவட்டம், முனிராபாத் தாலுகாவின், பசாபுரா கிராமத்தை சேர்ந்தவர் பீமேஷ், 28. இவர் இதே கிராமத்தில் வசிக்கும், பி.யு.சி., மாணவியை அறிமுகம் செய்து கொண்டார்.
அவரை காதலிப்பதாக நாடகமாடினார். மாணவி கல்லுாரிக்கு செல்லும் போது, பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தார்.
அதன்பின் மாணவியும் பீமேஷை காதலிக்க துவங்கினார். 2022ல் திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதை மாணவி தன் பெற்றோரிடம் கூறினார். கோபமடைந்த பெற்றோர், முனிராபாத் போலீஸ் நிலையத்தில், புகார் செய்தனர்.
போலீசாரும், பீமேஷை கைது செய்தனர். விசாரணையை முடித்து கொப்பால் மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் குற்றம் உறுதியானதால், பீரேஷுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி குமார், நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு