வேளாண் பொருட்கள் ஏற்றுமதி 3 மாதங்களில் 30சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் வேளாண் ஏற்றுமதி வளர்ச்சி, முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த மூன்று மாதங்களின் சராசரி 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக, எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்ட்ஸ் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
வேளாண் ஏற்றுமதிக்கான ஆண்டு வளர்ச்சி விகிதத்தின் தரவுகளை 2019ம் ஆண்டு முதல் கண்காணித்ததில், கடந்த சில மாதங்களில் ஏற்றுமதி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:
உலகம் முழுக்க கொரோனா தொற்று பரவி இருந்த நிலையில், 2020ம் ஆண்டு நடுப்பகுதி மற்றும் 2021ம் ஆண்டின் முற்பகுதியில் விவசாய ஏற்றுமதி, குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த 2020 டிசம்பரில், அதற்கு முந்தைய ஆண்டு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 100 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி கண்டிருந்தது. இருப்பினும், இந்த வளர்ச்சி 2021ம் ஆண்டு முழுதும் படிப்படியாக குறைந்து, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் சீரற்றதாக மாறியது. இதன்பின், 2023 டிசம்பர் முதல் ஒரு நிலையான வளர்ச்சிப்போக்கு உள்ளது.
தரவுகளின்படி, வளர்ச்சி நேர்மறையாக நகர்கிறது. சமீபத்திய புள்ளி விபரங்கள் இந்த துறை நன்றாக மீண்டு, வேகம் பெற்றிருப்பதை காட்டுகின்றன.
இவ்வாறு தெரிவித்உள்ளது.
மேலும்
-
விளையாட்டு விடுதி தேர்வு போட்டி
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று 'அசத்தல்' உயிரியியல் பிரிவில் சாதனை
-
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்
-
கள்ளக்குறிச்சியில் வேல் வழிபாடு
-
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 82 பேர் ஆஜர்
-
பி.எம்., விவசாயி கவுரவ நிதி உதவி விண்ணப்பிக்க அழைப்பு