பராமரிப்பிலாத குளம் சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண்டி கிராமத்தில் பொது குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.

இந்த தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராக பயன்பட்டு வருகிறது. குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் கோரை புற்கள் வளர்ந்து உள்ளன. இதனால், குளத்தில் போதுமான அளவு தண்ணீரை சேகரிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

கால்நடைகள் தண்ணீர் குடிக்க குளத்தில் இறங்கும்போது, கோரை புற்களில் சிக்கி சிரமத்திற்கு உள்ளாகிறது. எனவே, பொது குளத்தை சீரமைக்க ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement