கிருஷ்ணா கால்வாயில் குளித்த வாலிபர் பலி

திருநின்றவூர்,
திருநின்றவூர் அடுத்த பாக்கம், வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 30; பெயின்டர்.

இவர், நேற்று முன்தினம் இரவு, பாக்கம் கிருஷ்ணா கால்வாயில், மது போதையில் குளிக்க சென்றபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

அவரது தாய் பிரேமா, 52, அளித்த புகாரின்படி, போலீசார் இரவு முழுதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று மதியம், ஆலத்துார் கிருஷ்ணா கால்வாய் அருகே, முருகன் உடல் கரை ஒதுங்கியது. ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Advertisement