சிலை திருட்டு வழக்குகளில் 137 பேர் கைது

சென்னை:சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், கடந்த ஆண்டு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்த, 137 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் சிலை திருட்டு தொடர்பான வழக்கு களை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம், சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர நீதிமன்றம், மதுரை கூடுதல் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் போன்றவை விசாரிக்கின்றன.

கடந்த ஆண்டு சிலை திருட்டு வழக்கில் சிக்கிய, 137 பேருக்கு, மூன்று நீதிமன்றங்களில், வெவ்வேறு காலகட்டத்தில், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாமினில் வெளிவர முடியாத படி, ஆணைகள் பெறப்பட்டு உள்ளன. மேலும், 14 வழக்குகளில், 42 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளது என, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement