மரக்கன்றுகள் வாங்க வனத்துறை புதிய வசதி
சென்னை, மே 9-
மரக்கன்றுகள் வாங்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக பணம் செலுத்தினால், வீட்டிலிருந்தபடியே பெறும் வகையில், புதிய வசதி அமலுக்கு வந்துள்ளது என, வனத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, பசுமை தமிழகம் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று, மரக்கன்றுகள் நட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பொது மக்களுக்கு தரமான மரக்கன்றுகள் அருகில் உள்ள நாற்றங்காலில் இருந்து கிடைக்க, https://nursery.greentnmission.com என்ற புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் இந்த இணையதளம் வாயிலாக, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகள் எங்கு உள்ளன என்பதை அறியலாம்.
உரிய கட்டணங்களை ஆன்லைன் முறையில் செலுத்தினால், அவர்கள் வீட்டிற்கே மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்படும்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களை, 1800 599 7634 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.
தற்போது, சென்னையில் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய வசதி, விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு