மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி 94.96 சதவீதம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 19ம் இடம் பெற்றது. வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 2022ல் மூன்றாமிடம், 2023ல் 12ம் இடம், 2024ல் 17வது இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று (மே 8ல்) பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 7499 மாணவிகள், 6483 மாணவர்கள் என 13,982 பேர் எழுதினர். தேர்வு முடிவுகளின் படி 6011 மாணவர்கள், 7266 மாணவிகள் என 13,277 பேர் தேர்ச்சி அடைந்து 94.96 சதவீதம் பெற்று மாநில அளவில் 19ம் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் 71 அரசுப் பள்ளிகளில் 12, 36 அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4, 53 தனியார் பள்ளிகளில் 36 என 52 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் அதிகபட்சமாக தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு 595, 592, 590 எடுத்துள்ளனர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 600க்கு 582 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
தேர்ச்சி அதிகரிப்பு
முதன்மை கல்வி அலுவலர் சின்ன ராஜு கூறுகையில், மாவட்டத்தில் 160 மேல்நிலைப் பள்ளிகளில் அரசுப் பள்ளிகள் 12 உட்பட 52 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகளில் 4 மட்டுமே நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதால் மாநில அளவில் ரேங்க் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் கடந்த ஆண்டை விட (94.89 சதவீதம் தேர்ச்சி) அதிக மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். தேர்ச்சியும் 0.07 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி சரிவிற்கான காரணம் குறித்து விசாரிக்க உள்ளோம் என்றார்.
மாவட்டத்தில் 13 ஆண்டுகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி, மாநில ரேங்க்
மேலும்
-
விளையாட்டு விடுதி தேர்வு போட்டி
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று 'அசத்தல்' உயிரியியல் பிரிவில் சாதனை
-
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்
-
கள்ளக்குறிச்சியில் வேல் வழிபாடு
-
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 82 பேர் ஆஜர்
-
பி.எம்., விவசாயி கவுரவ நிதி உதவி விண்ணப்பிக்க அழைப்பு