மாணவியர் பேட்டி

தந்தை வெங்கடேசன் தினக்கூலி. ஏழாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தேன். பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால், ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளியில், ஆங்கிலவழி படிப்பில் சேர்ந்தேன். 10ம் வகுப்பில் 493; பிளஸ் 1ல் 592 மதிப்பெண் பெற்றேன். பிளஸ் 2 தேர்வில் 591 மதிப்பெண் பெற்றது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்பதே முதன்மையான இலக்கு; அதற்கேற்றபடி படிப்பை தேர்வு செய்ய உள்ளேன்.
வி.கீர்த்திகா, மதிப்பெண்: 591,
சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஷெனாய் நகர்.
எங்கள் பள்ளியில், எப்போதும் வணிகப்பிரிவில் தான் மாணவியர் முதலிடம் பெறுவர். இம்முறை அறிவியல் பிரிவு மாணவியான நான் முதலிடம் பிடித்துள்ளேன். மாநகராட்சி அளவில் மூன்றாம் இடம் பெற்றது மகிழ்ச்சி. தொழில்நுட்ப பிரிவில் பொறியியல் பட்டதாரியாக விரும்புகிறேன்.
கே.ரோஷினி, மதிப்பெண்: 583,
சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர்
மாநகராட்சி அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளி அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளேன். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரையாண்டு வரை, மதிப்பெண் குறைவாக இருந்தது. அரையாண்டுக்கு பின் சிறப்பு வகுப்புகள் நடத்தி, ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். அதனால் தான், சிறப்பான மதிப்பெண் பெற முடிந்தது. மேல்படிப்பில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டப்படிப்பு அல்லது டேட்டா சயின்ஸ் படிக்க விரும்புகிறேன்.
வி.மமதா, மதிப்பெண்: 588,
சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர்
என்னை நம்பிய ஆசிரியர்கள், பெற்றோருக்கு முதலில் நன்றி. அவர்கள் தொடர்ந்து அளித்த ஊக்கத்தால், நல்ல மதிப்பெண் பெற்றுள்ளேன்; அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன். கணினி அறிவியல் பிரிவில் பொறியியல் பட்டதாரி ஆக விரும்புகிறன்.
பி.பூஜா, மதிப்பெண்: 583,
சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர்
மேலும்
-
விளையாட்டு விடுதி தேர்வு போட்டி
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று 'அசத்தல்' உயிரியியல் பிரிவில் சாதனை
-
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்
-
கள்ளக்குறிச்சியில் வேல் வழிபாடு
-
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 82 பேர் ஆஜர்
-
பி.எம்., விவசாயி கவுரவ நிதி உதவி விண்ணப்பிக்க அழைப்பு