பட்டாபிஷேக ராமருக்கு திருக்கல்யாண உற்ஸவம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் தனி சன்னதியாக பட்டாபிஷேக ராமசுவாமி கோயில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய சைத்ரோத்ஸவ விழா கோலாகலமாக நடக்கிறது. மே 3ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

நேற்று இரவு 7:00 மணிக்கு பட்டாபிஷேக ராமர், சீதா பிராட்டியாருக்கு திருக்கல்யாணம் உற்ஸவம் நடந்தது. தாம்பூலம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் பரப்பப்பட்டிருந்தன.

யானை வாகனத்தில் பட்டாபிஷேக ராமர் வீதி உலா வந்தார். மே 11ல் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பெரிய தேரோட்டம் நடக்கிறது.

Advertisement