திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு; விவசாயிகள் கவலை

உடுமலை; திருமூர்த்தி அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால், கோடை கால பாசனம் மற்றும் குடிநீர் தேவையை அணை நீர்இருப்பு சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன நீர் வழங்கப்படுகிறது.
தற்போது கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 362 ஏக்கர் நிலங்கள், மூன்றாம் மண்டல பாசனத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.
மண்டல பாசனத்துக்காக தொகுப்பு அணைகளில் இருந்து, காண்டூர் கால்வாய் வாயிலாக தண்ணீர் பெற்று, திருமூர்த்தி அணையில் இருப்பு செய்து பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
மூன்றாம் மண்டல பாசனம், மூன்றாம் சுற்றுக்கு, ஏப்., 15ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், பாசனத்துக்கு நீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்றைய காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம், 60 அடிக்கு, 33.75 அடியாக இருந்தது. அணைக்கு காண்டூர் கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 852 கனஅடி நீர்வரத்தும், அணையிலிருந்து, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு, 851 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், மூன்றாம் மண்டல பாசனத்துக்கு, முழுமையாக தண்ணீர் வழங்குவது கேள்விக்குறியாகியுள்ளது; கோடை காலத்தில், அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் நீர் இருப்பு செய்ய வேண்டும்.
இந்நிலையில், பி.ஏ.பி., தொகுப்பு அணைகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளதுடன், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கோடை மழை தீவிரமடையாமல் இருப்பது விவசாயிகளை கவலையடையச்செய்துள்ளது.
மேலும்
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை