பத்மாவதி தாயார் கோவிலில் பரிணயோத்சவம் விமரிசை

சென்னை, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர்., பத்மாவதி தாயார் கோவிலில், பரிணாயோத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கலியுகத்தின் ஆரம்பத்தில், மகாவிஷ்ணு வைகுண்டத்தில் இருந்து, ஸ்ரீனிவாசராக பூமிக்கு வந்தார்.
நாராயண வனத்தை ஆண்டு வந்த வனத்தின் ராஜா, தன் மகள் பத்மாவதியை, ஸ்ரீனிவாசருக்கு மணமுடித்தார் என, வெங்கடாச்சல மகாத்மிய கிரந்தம் கூறுகிறது.
எனவே, பத்மாவதி தாயார், ஸ்ரீனிவாசரின் திருமண விழாவை குறிக்கும் வகையில், திருமலையில் ஆண்டுதோறும் பத்மாவதி தாயார் - ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு, மூன்று நாள் பரிணயோத்சவம் எனும் கல்யாண உத்சவம் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த 6ம் தேதி முதல் நேற்று வரை, அங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அதேபோல, விழாவின் நிறைவு நாளான நேற்று, தி.நகர்., பத்மாவதி தாயார் கோவிலில் பரிணயோத்சவம் கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.