தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

தேனி: தேனி எஸ்.பி., அலுவலக சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவின் சார்பில், தீண்டாமைஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் அல்லிநகரம் அருந்ததியர் தெருவில் நடந்தது.இப் பிரிவின் எஸ்.ஐ.,க்கள் ரகு, ராஜா தீண்டாமை பெருங்குற்றம் எனவும்,

சிறார் திருமணங்களால் ஏற்படும் தீமைகள், சைபர் கிரைம் குற்றங்களில் தப்பித்துக் கொள்ளும் நடைமுறைகள், போக்சோ சட்டங்களின் விபரம், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பேசினர். ஏட்டுக்கள் பாண்டியம்மாள், தங்கஈஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement