நில அளவைக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தலையாரி சஸ்பெண்ட்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் நில அளவை செய்வதற்காக ரூ.3500 லஞ்சம் வாங்கி கைதான பனிச்சகுடி வி.ஏ.ஓ., நைனாமுகமது 31, தலையாரி சித்ரா 48 , 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.திருவாடானை தாலுகா பெருவாக்கோட்டையை சேர்ந்தவரின் நிலத்தை அளப்பதற்காக பனிச்சகுடி குரூப் வி.ஏ.ஓ., நைனாமுகமதுவை அணுகினார். அதற்கு வி.ஏ.ஓ., ரூ.4000 லஞ்சம் கேட்டார். ரூ.3500 தருவதாக பேரம் பேசப்பட்டது.
லஞ்சம் கொடுக்காத விரும்பாத அந்த நபர் ,ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மே 8 ல் பெருவாக்கோட்டை கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ., நைனாமுகமது முன்னிலையில் தலையாரி சித்ராவிடம் கொடுத்தார்.
மறைந்திருந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நைனாமுகமது, சித்ராவை கைது செய்தனர். வி.ஏ.ஓ.,வை, ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தலையாரியை, திருவாடானை தாசில்தார் ஆண்டி சஸ்பெண்ட் செய்தார்.
மேலும்
-
காமாட்சி அம்மன் கோவிலில் திருகல்யாண உற்சவம் துவக்கம்
-
திருவிழாவுக்கு சிறப்பு பஸ் இல்லை கொழுமம் மக்கள் வேதனை
-
சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
-
மானிய விலையில் சோளம் விதை
-
பள்ளி திறக்கும் நாளில் பாடபுத்தகம் முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு
-
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி