முளைப்பாரி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: செட்டியகோட்டை ஜெக மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்தது. பெண்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் வழிபாடு செய்தனர்.

பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட முளைப்பாரிகள் அப்பகுதி குளத்து நீரில் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement