பழநி கிரி வீதியில் ஆய்வு

பழநி: பழநி கிரி வீதியில் பொறியாளர்கள் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

பழநி கோயிலைச் சுற்றிலும் 2.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு கிரி விதி அமைந்துள்ளது. இதனை ஆய்வு செய்ய பொறியாளர்களுக்கு குழு நேற்று வந்தனர். கிரிவீதியில் துளையிட்டு 2003 ம் ஆண்டு அமைக்கப்பட்ட கான்கிரீட் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ரோட்டின் அமைப்பு இரண்டையும் தனித்தனியாக பிரித்தெடுத்தனர். அதனை ஆய்வுக்கு உட்படுத்தி ரோட்டின் தரத்தை சோதிக்க திட்டமிட்டுள்ளனர். சோதனையின் முடிவுகளுக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement