குறைந்த மின்னழுத்த பிரச்னை திருவள்ளூர் மக்கள் அவதி
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட டோல்கேட், ஐ.சி.எம்.ஆர்., காவலர் குடியிருப்பு, ஜவஹர் நகர், முத்தழகு நகர், ஜெ.ஜெ.நகர், பெரும்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அப்பகுதியில், 4,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், புதிது, புதிதாக வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர், 'மின்விசிறி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின்' போன்ற மின்சாதன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால், இப்பகுதிவாசிகளுக்கு மின்தேவை அதிகளவில் தேவைப்படுகிறது.
குறிப்பாக பகலில் கொளுத்தும் வெயில் காரணமாக இரவு நேரத்தில், காற்று வசதியின்றி புழுக்கத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.
காரணம், ஒரு மாதமாக குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகிப்பதே. இதனால், இரவு நேரத்தில், 'ஏசி' சாதனங்கள் தொடர்ந்து இயங்குவதில்லை. இதன் காரணமாக, மக்கள் அவதிபடுகின்றனர்.மின்பற்றாக்குறையை சரிப்படுத்த, முத்தழகு நகர் மற்றும் ஜெ.ஜெ.நகர் பகுதியில் மின்மாற்றி அமைக்க வேண்டும் என்ற, கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'முத்தழகு நகர், ஜெ.ஜெ.நகர் பகுதியில் வீடுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறைந்தழுத்த மின்சாரம் கிடைக்கிறது. இதை நிவர்த்தி செய்யும் வகையில், அப்பகுதியில் புதிதாக ஒரு மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு