கோவில் திருவிழாவிற்கு மேடை அமைப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஓட்டந்தாங்கல் ஊராட்சியில் பூந்தண்டலம் துணை கிராமம் உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் தை, ஆடி, சித்திரை ஆகிய மாதங்களில் கோவில் திருவிழாக்கள் விமரிசையாக நடப்பது வழக்கம்.

அப்போது, இரவு நேரத்தில் நாடகம் நடத்த போதிய மேடை வசதி இல்லாமல் இருந்தது. நாடக மேடை அமைக்க கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 ---- 25 நிதி ஆண்டில், 15வது மத்திய மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ், 10 லட்சம் செலவில், நாடக மேடை கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நாடக மேடை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement