நில அளவில் 2ம் இடம் பிடித்த ஈரோடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாதனை

ஈரோடு,
பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம், 97.98 சதவீத தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை, 222 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 10,403 மாணவர், 11,876 மாணவியர் என, 22,279 பேர் தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், 10,113 மாணவர்கள், 11,716 மாணவியர் என, 21,829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மாணவர்கள், 97.21 சதவீதம், மாணவியர், 98.65 சதவீதம் என, மொத்த தேர்ச்சி சதவீதம், 97.98 ஆகும். இதன் மூலம் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தது. கடந்தாண்டு, 97.42 சதவீதம் பெற்று இரண்டாமிடம் பிடித்தது. நடப்பாண்டு 0.56 சதவீதம் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் கூறியதாவது: தேர்வு முடிவில், 70 தனியார் பள்ளிகள், 37 அரசு பள்ளிகள் என, 107 பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு தேர்ச்சி பெற்றுள்ளது. 450 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி ஜூனில் நடக்கும் துணை தேர்வில் வெற்றி பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு அரசு மாதிரி பள்ளியில்
தேர்வெழுதிய, 103 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளியை சேர்ந்த மாணவர், 590 மதிப்பெண் பெற்றுள்ளார். 15 மாணவ, மாணவிகள் ஏதாவது ஒரு பாடத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். கிறிஸ்து ஜோதி பள்ளி மாணவி, 598 மதிப்பெண், கோபி சாரதா பள்ளி மாணவர், 597 மதிப்பெண்
பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற மூன்று பள்ளிகள், நடப்பாண்டு நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 1,223 மாணவர்கள் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement