பிரதான சாலையில் மின்விளக்கின்றி அவதி
திருப்பபோரூர்:ஓ.எம்.ஆர்., சாலையில், கேளம்பாக்கம் முதல் ஆலத்துார் வரை, 12 கி.மீ., துார சாலை உள்ளது.
இந்த சாலையில் கல்வி, தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மனை பிரிவுகள், விவசாய நிலங்கள், பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
பல்வேறு பகுதிகளுக்குச் செல்வோர், இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.
முக்கியமான இந்த சாலையில், மின் விளக்குகள் இல்லாததால், சுற்றியுள்ள கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அதனால், சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால், சிரமத்துடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
அதிக போக்குவரத்துள்ள முக்கியமான இந்த சாலையில் மின்விளக்குகள் அமைக்காதது, நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை காட்டுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இங்கு மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
விளையாட்டு விடுதி தேர்வு போட்டி
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று 'அசத்தல்' உயிரியியல் பிரிவில் சாதனை
-
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்
-
கள்ளக்குறிச்சியில் வேல் வழிபாடு
-
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 82 பேர் ஆஜர்
-
பி.எம்., விவசாயி கவுரவ நிதி உதவி விண்ணப்பிக்க அழைப்பு