உணவு கழிவை சாப்பிட குவியும் மாடுகளால் விபத்து அபாயம்

வண்டலுார்:வண்டலுாரில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில், கிளாம்பாக்கம் செல்லும் வாகன ஓட்டிகள் பயணிக்கும்படி, உயிரியல் பூங்காவிற்கு முன் 200 மீ., துாரத்தில் அணுகு சாலை துவங்குகிறது.

இந்த அணுகுசாலை ஓரம் கடை அமைத்துள்ள உணவகத்தார், உணவுக் கழிவுகளை அணுகு சாலை ஓரம் உள்ள நடைமேடையில் கொட்டிச் செல்கின்றனர்.

அக்கம் பக்கத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாடுகள், இந்த உணவுக் கழிவுகளை உண்ண வருகின்றன. அப்போது, ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு முட்டி, சாலையின் நடுவே ஓடுகின்றன.

இந்த சம்பவம் தினமும் நடப்பதால், அணுகுசாலையில் வரும் வாகன ஓட்டிகள், மாடுகளால் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

இதனால் விபத்து, உயிரிழப்பு ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement