விதைப்பு பணியில் மானாவாரி விவசாயிகள்


ராசிபுரம்,

கோடை மழை காரணமாக, ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் மானாவாரி விவசாயிகள் விதைப்பு பணியை தொடங்கியுள்ளனர். ராசிபுரம் சுற்று வட்டார பகுதி மற்றும் நாமகிரிப்பேட்டை, கவுண்டம்பாளையம், பேளுக்குறிச்சி, குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஒரு மணி நேரம் காற்றுடன் கோடை கன மழை பெய்தது.

இந்த மழை விதைப்பு பணிக்கு போதுமானதாக இருந்தது. இதனால், மானாவாரி விவசாயிகள் விதைப்பு பணியை நேற்று தொடங்கினர். சித்திரை மாதத்தில் விதைக்கக் கூடிய, கடலை, சோளம் உள்ளிட்டவைகளை தங்களது நிலங்களில் விதைத்தனர்.

Advertisement