அம்மணீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி விழா

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசு அம்மணீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு, வரும், 11ம் தேதி கங்கா, பார்வதி உடனமர் அம்மணீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசுவில் பிரசித்தி பெற்ற அம்மணீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் வரும், 11ம் தேதி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

அன்று, காலை, 7:30 மணிக்கு கணபதி ேஹாமம், 9:30 மணிக்கு சுயம்வர ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.காலை, 10:30 மணிக்கு கங்கா, பார்வதி உடனமர் அம்மணீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து திருக்கல்யாண அன்னதான விழா நடக்கிறது.

நடப்பாண்டு சித்ரா பவுர்ணமி திருவிழாவில், திருமண தடை நீங்கவும், திருமணமாகாதவர்களுக்காக சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதனால், திருமணம் ஆகாதோர் சுயம்வர ேஹாமத்தில் பங்கேற்று பயன்பெறலாம். இதற்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும், என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement