தண்டவாளத்தில் கல் வைத்தது யார்?

திருப்பூர்: திருப்பூர் மார்க்கமாக ஏராளமான சரக்கு ரயில்கள், பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றன.

இந்நிலையில், காவிலிபாளையம் - வஞ்சிபாளையம் இடைப்பட்ட ரயில் பாதையில், நேற்று முன்தினம் இரவு, கல் ஒன்று இருந்துள்ளது. இதை பார்த்த ரயில் ஓட்டுனர் அதிர்ச்சியடைந்தார்.

ரயில் கல் மீது ஏறி செல்ல, கல் முழுதும் நொறுங்கியது.ஒரு வேளை பெரிய கல்லாக இருந்திருந்தால், ரயில் தடம் புரண்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிக்கும் என்ற, அச்சம் ஏற்பட்டது. ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தது யார் என்பது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மத்தியில், ரயில் தண்டவாளத்தில் கல் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

Advertisement