மாகாளியம்மன் கோவில் பொங்கல் சாட்டு விழா

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த 15 வேலம்பாளையம், காவிலிபாளையம் புதுாரில் உள்ள ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த, 4ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், நேற்று முன்தினம் மாலை மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏராளமான பெண் பக்தர்கள் தங்கள் வீட்டில் இருந்து, மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இரவு மாவிளக்கு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மதியம் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசித்தனர். பொங்கல் விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Advertisement