பஸ் நிறுத்தத்தில் அட்டவணை வைக்க மக்கள் வலியுறுத்தல்

மல்லசமுத்திரம், வையப்பமலை பஸ் நிறுத்தத்தில், அரசு பஸ்கள் வரும் நேரம் குறித்து, கால அட்டவணை வைக்க வேண்டும்.
மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை பஸ் நிறுத்தம் ராசிபுரம் - திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு தினமும், 10 நிமிடத்திற்கு ஒருமுறை அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
அதுமட்டுமின்றி நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, புதன்சந்தை, பெரியமணலி, பருத்திப்பள்ளி, ராமாபுரம், மோர்பாளையம், பாலமேடு, கோட்ட
பாளையம், மல்லசமுத்திரம், காளிப்பட்டி பகுதிகளுக்கு அரசு பஸ்கள் செல்கின்றன.
இப்பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள், எந்த நேரத்தில் வருகிறது என மக்களுக்கு தெரிவதில்லை. இதனால் குழப்பத்தில் உள்ளனர்.
எனவே, வையப்பமலை பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் குறித்த காலஅட்டவணையை வைக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement