ப.வேலுார் கொங்கு மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை
ப.வேலுார், ப.வேலுார், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவர் மதன்குமார், 600க்கு 596 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் பாடவாரியாக தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 99, இயற்பியல் 100, வேதியியல் 100, கணினி அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் கௌசிக், 592 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். இவர் தமிழில், 98, ஆங்கிலம் 97 கணிதம் 97, இயற்பியல் 100 வேதியியல் 100, கணினி அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவியர் ஹேமஸ்ரீ, கவிப்பிரியா ஆகியோர், 591 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.
பாடவாரியாக மாணவி ஹேமஸ்ரீ தமிழ் 99, ஆங்கிலம் 96, கணிதம் 100, இயற்பியல் 97, வேதியியல் 99, கணினி அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி கவிப்பிரியா தமிழில் 98, ஆங்கிலம் 96, கணிதம் 99, இயற்பியல் 99, வேதியியல் 99, கணினி அறிவியல் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும் கணினி அறிவியலில், 29 பேர், கணிதத்தில், 4 பேர், இயற்பியலில் இருவர், வேதியியலில் 4 பேர், கணினி பயன்பாட்டில் ஒரு மாணவர், வணிகவியலில் ஒரு மாணவி, வணிக கணிதத்தில் ஒரு மாணவி தலா 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் தமிழில், 15 பேர், ஆங்கிலத்தில், 9 பேர், கணிதத்தில் 9 பேர், இயற்பியலில், 4 பேர், வேதியியலில் 6 பேர், கணினி அறிவியலில் 4 பேர், உயிரியலில் இருவர், வணிக கணிதம் மற்றும் கணக்கு பதிவியலில் தலா ஒருவர், 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 590-க்கு மேல் 4 பேர், 580-க்கு மேல் 13 பேர், 570-க்கு மேல் 23 பேர், 550-க்கு மேல் 48 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைவர் கிருத்திகன் லோகேஷ், செயலாளர் தங்கராஜூ, துணைத்தலைவர் சுப்பிரமணியம், பொருளாளர் தியாகராஜன், துணை செயலாளர் நடராஜன், போக்குவரத்து இயக்குனர் செந்தில்குமார், இயக்குனர்கள், முதல்வர் காந்திமதி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும்
-
காமாட்சி அம்மன் கோவிலில் திருகல்யாண உற்சவம் துவக்கம்
-
திருவிழாவுக்கு சிறப்பு பஸ் இல்லை கொழுமம் மக்கள் வேதனை
-
சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
-
மானிய விலையில் சோளம் விதை
-
பள்ளி திறக்கும் நாளில் பாடபுத்தகம் முழுமையாக வழங்க எதிர்பார்ப்பு
-
இலவச வண்டல் மண் எடுக்கும் திட்டம் குடிமங்கலத்தில் 51 நீர்நிலைகளில் அனுமதி