நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை

நாமக்கல்,
நாமக்கல், காவேட்டிப்பட்டியில், 25 ஆண்டுகளுக்கு மேலாக குறிஞ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. 2024- 25ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் அறிவியல் பாடப்பிரிவில் மாணவன் சக்தி 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ஆல்பினஸ் ரூவஸ் 600க்கு 591 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி இனியா 600க்கு 589 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் இயற்பியலில், 9 பேரும், வேதியியலில், 7 பேரும், உயிரியலில், 3 பேரும், கணிதத்தில், 6 பேரும், கணினி அறிவியலில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலத்தில் தலா, 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

590 மதிப்பெண்களுக்கு மேல் இருவரும், 585 மதிப்பெண்களுக்கு மேல், 8 பேரும், 580 மதிப்பெண்களுக்கு மேல், 23 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல், 29 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல், 42 பேரும் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 298 மதிப்பெண் பெற்ற உமா மகேஷ் என்ற மாணவனை, பிளஸ் 2 தேர்வில் 547 மதிப்பெண் பெற வைத்துள்ளனர். இவர்களுக்கு பள்ளி தாளாளர் தங்கவேல் இனிப்பு வழங்கி பாராட்டினார். மேலும் பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர். அட்மிஷன் தொடர்புக்கு 93445 67484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement