காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

3


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள சம்பாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 7 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் பதற்றத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் விடிய விடிய நடத்திய தொடர் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து தக்க பதிலடி கொடுத்தது.


பாகிஸ்தானின் 50 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள சம்பாவில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் 7 பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகள் யாரும் பதுங்கி இருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Advertisement