ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

8

சென்னை: இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை (மே 10) மாலை 5.00 மணிக்கு சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழக மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement