முத்து முத்தாய் மதிப்பெண் முத்துார் விவேகானந்தா அசத்தல்

திருப்பூர்: திருப்பூர், முத்துார் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், பிளஸ் 2 தேர்வில், சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாணவி பிரணிதா, 600க்கு, 595 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். இவர் தமிழில், 99, ஆங்கிலம் - 96, கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடங்களில், 100 மதிப்பெண் பெற்றார்.
மாணவன் நிஷாந்த், 593 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம் பெற்றார். தமிழ் - 98, ஆங்கிலம் - 98, உயிரியியல் - 97; கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில், 100 மதிப்பெண் பெற்றார். மாணவிகள் இந்துஜா, தர்ஷிணி ஆகியோர், 591 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.
மேலும், 594க்கு மேல், 4 பேர்; 580க்கும் மேல், 18 பேர்; 570க்கும் மேல், 30 பேர் பெற்றனர். 560க்கு மேல், 44 பேர்; 500க்கும் மேல், 92 பேர் பெற்று சாதனை படைத்தனர்; 48 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் சண்முகம், தலைமை வகித்து, முதல் மூன்றிடம் பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பள்ளி செயலாளர் சக்திவேல், நிர்வாக இயக்குனர் அசோக்குமார், முதல்வர் நடராஜ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
மேலும்
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை