மாணவர்களின் சாதனைக்கு ஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி

திருப்பூர்: தாராபுரம் தாலுகா ஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 32 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி பிளஸ் 2 பொது தேர்வில் சாதனை படைத்துள்ளது.
பள்ளி மாணவி கவுசிகா, 600க்கு, 595 மதிப்பெண் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். அவர் தமிழ், ஆங்கிலம், கணக்குப்பதிவியல் பாடத்தில், 99 மதிப்பெண்; வணிகவியல், கம்ப்யூட்டர் பயன்பாடு பாடத்தில், 100 மதிப்பெண்; பொருளியல் பாடத்தில், 98 மதிப்பெண் பெற்றார்.மாணவி மித்ரா - 583 மதிப்பெண்; தருணிகா - 582; கவுசல்யா - 581 மதிப்பெண் பெற்றனர்.
சாதித்த மாணவிகளுக்கு, பரிசு வழங்கி அவர்களை பாராட்டி பேசிய பள்ளி தாளாளர் பரிமளம், ''சிறந்த மதிப்பெண்களுடன் வாழ்க்கைக்கு தேவையான பாரம்பரிய அறிவு, கடின உழைப்பு, ஆரோக்கியம், தன்னம்பிக்கை, எதையும் தாங்கும் ஆற்றல் மற்றும் எதிர்கால வாழ்க்கைக்குரிய பண்புகளை கற்றுத்தருகிறோம் என்பதே எங்களுக்கு பெருமிதம்,'' என்று பாராட்டினார்.
மேலும்
-
பொய்த்தகவல் பரப்பி உலகத்தை ஏமாற்றும் பாகிஸ்தான்!
-
எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!
-
பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து