ஆற்றில் மூழ்கி சிறுமி பலி

தாராபுரம்: தாராபுரம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் காவியா, 15; பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி கோடை விடுமுறை என்பதால், தாராபுரம் பழைய ஆற்றுபாலம் அருகே அமராவதி ஆற்றில் உறவினர்களுடன் நேற்று மாலை குளிக்க சென்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக காவியா குழியில் சிக்கி மூழ்கினார். அவரை உறவினர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் காவியா இறந்தது தெரிந்தது. புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement