'தோல்வி அவமானல்ல; வெற்றிக்கான அடையாளம்' : 'ஆன்லைனில்' ஆற்றுப்படுத்தும் கல்வித்துறை

திருப்பூர்: பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, அரசின் அங்கீகாரம் பெற்ற சேவை மையத்தின் சார்பில் 'ஆன் லைன்' வாயிலாக கவுன்சிலிங் வழங்கப்படுகிறது; இது, பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது
.நேற்று, 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. வெற்றியடைந்த மாணவர்கள், சந்தோஷத்தில் திளைத்தனர். தோல்வியடைந்த மாணவ, மாணவிகள், வருத்தத்தில் துவண்டு போயினர். சிலர் தோல்வியை அவமானமாக கருதி, தவறான முடிவெடுக்கும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொண்டனர்.
ஆனால், 'இந்த பள்ளிக்கல்வி தோல்வியால் துவண்டு போய்விடக்கூடாது' என, கல்வித்துறை நம்பிக்கையூட்டி வருகிறது. தோல்வியடைந்த மாணவ, மாணவியரை ஆற்றுப்படுத்தும் வகையில், அரசின் அங்கீகாரம் பெற்ற சேவை மையத்தில் உள்ள ஆற்றுப்படுத்துனர்கள், மொபைல் போன் வாயிலாக, மாணவ, மாணவியரை தொடர்பு கொண்டு அவர்களை ஆற்றுப்படுத்துகின்றனர்.'
'இந்த தோல்வி என்பது, எந்த வகையிலும் உங்களை பாதிக்காது; இது, நிரந்தரமானது அல்ல; எனவே, மனம் தளர கூடாது; அடுத்த மாதம் நடக்கவுள்ள துணைத் தேர்வில் தேர்வெழுதி, அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அதற்கு அடுத்த மாதமே கல்லுாரியில் இணைவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியை அவமானமாக கருதக்கூடாது. தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதை சரி செய்து கொள்வதன் வாயிலாக, வரும் நாட்கள் வெற்றிகரமானதாக அமையும்; எதிர்காலம் பிரகாசிக்கும் என்பதை மாணவ, மாணவியர் உணர வேண்டும்'' என, நம்பிக்கை ஊட்டுகின்றனர்.
அதே நேரம் பெற்றோரையும் தொடர்பு கொண்டு, ''இந்த தோல்வியை சுட்டிக்காட்டி, பிள்ளைகளை சங்கடப்படுத்த வேண்டாம்; அவர்களை ஊக்குவித்து, துணை தேர்வெழுத செய்யுங்கள்'' என்கின்றனர்.
அரசுப்பள்ளிகள் மட்டுமின்றி, தனியார், உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்வெழுதி தோல்வியடைந்த மாணவ, மாணவியரை கூட மொபைல் போனில் அழைத்து ஆறுதல் கூறி, தேற்றனர். இந்த ஆற்றுப்படுத்துதல் சேவை, பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.--
பொது தேர்வில் வெற்றி, தோல்வியடைந்த மாணவர்கள், தொடர்ந்து வரும் துணைத் தேர்வு, தொடர்ந்து எந்த கல்லுாரியில் இணைவது, எந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது என்பது போன்ற வழிகாட்டுதல்களை பெற, கல்வித்துறையின், '14417' என்ற எண்ணையும், தேர்வு தோல்வியால் துவண்டு போய், மன ரீதியான பாதிப்பை எதிர்கொண்டுள்ள மாணவ, மாணவியர், '14416' என்ற எண்ணை தொடர்பு கொண்டால், அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை கிடைக்கும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.---
மேலும்
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: தலையிட உலக வங்கி மறுப்பு
-
எல்லையோர மக்களின் பாதுகாப்பு: குஜராத் முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது மத்திய அரசு; ராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை
-
அண்ணே..அண்ணே..பாடலால் வந்த பிரச்னை..கங்கை அமரனின் கலகலப்பு