பெயரில் மட்டுமல்ல தேர்ச்சியிலும் 'சென்சுரி'
திருப்பூர்: திருப்பூர், சென்சுரி பள்ளி மாணவர்கள் அனைவரும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம், 103 பேர் தேர்வெழுதியதில், 500 மதிப்பெண்களுக்கு மேல், 46 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவி தேவி, 600க்கு 594 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றார்; வணிகவியல் மற்றும் பொருளியல் பாடத்தில் சதமடித்துள்ளனர். மாணவி ரித்திஹா ஸ்ரீ, 590 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடம் பெற்றதுடன், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
மாணவி பிரணிஷா, 589 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடத்துடன் கணிதம், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில், 100 மதிப்பெண் பெற்றுள்ளார். கணித பாடத்தில், 3 பேர்; கம்ப்யூட்டர் அறிவியல் பயன்பாடு பாடத்தில், 9 பேர்; வணிகவியல் பாடத்தில், ஒரு மாணவன்; பொருளியல் பாடத்தில், 2 மாணவர்கள் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்தில், 3 மாணவர்கள், 100 மதிப்பெண் பெற்றனர்.
'மனனம் செய்து மதிப்பெண் பெறுதல் என்பது தவிர்க்கப்பட்டு, மாணவர்களின் தனித்திறன் கண்டறியப்பட்டு, கல்வி போதிக்கப்படுகிறது; 10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையும், தங்களது கனிவான கற்பித்தலால் சாதனை படைக்க வைத்துள்ளது' என்கிறது சென்சுரி பள்ளி. சாதனை படைத்த மாணவர்கள், போதித்த ஆசிரியர்களை பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபா பால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
மேலும்
-
ஆதாரங்களை கொடுத்தாலும் பயங்கரவாத தொடர்பை மறுக்கும் பாக்.,: இந்திய தூதர்
-
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
-
பொய்த்தகவல் பரப்பி உலகத்தை ஏமாற்றும் பாகிஸ்தான்!
-
எல்லையோர மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு; குஜராத்தில் பட்டாசு, டிரோன்களுக்கு தடை!
-
பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்: இந்தியா குற்றச்சாட்டு
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு