மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் பயிற்சி முகாம்

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் ஆராய்ச்சி திட்டத்திற்கான நிதி திட்ட முன்மொழிவு தயாரிப்பு பற்றிய நடைமுறை பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், துணை செயலாளர் வேலாயுதம், மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் காக்னே, துணை டீன் அகாடெமிக் (UG) சவுந்தர்யா, செவிலியர் கல்லுாரி முதல்வர் முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பேராசிரியர் ஆயீ வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக பால்ஸ் செவிலியர் கல்லுாரியின் முதல்வர் லதா ஏபேல், பங்கேற்று கருத்துரை வழங்கினார். மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை உதவி பேராசிரியர்கள் கிருபா ஷங்கர், டாக்டர் மேகா பெங்க்ரா ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் நிதியிடப்பட்ட திட்டத்திற்கான விண்ணப்பம் எப்படி செய்ய வேண்டும் என்பதை விளக்கினர்.
புதுச்சேரியின் அனைத்து செவிலியர் கல்லுாரிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட கல்லுாரியின் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
துணை பேராசிரியர் நதியா நன்றி கூறினார்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு