போலி ஆவணம் தயாரித்து பணம் கையாடல் சங்க முன்னாள் துணைத்தலைவருக்கு சிறை

ராமநாதபுரம்:போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் கையாடல் செய்த வழக்கில் புதுக்கோட்டை தச்சு, கொல்லு கூட்டுறவு தொழிலாளர்கள் குடிசைத் தொழில் சங்க முன்னாள் துணைத்தலைவர் கணேசனுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2006-2007 ல் ராமநாதபுரம் மாவட்டம் ஆதிதிராவிடர் நல கல்லுாரி மாணவர்கள் விடுதிக்கு மேஜை, நாற்காலி, கட்டில் வாங்கினர். இதில் அப்போதைய மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணி மற்றும் புதுக்கோட்டை தச்சு, கொல்லு கூட்டுறவு தொழிலாளர்கள் குடிசைத் தொழில் சங்கத்தின் துணைத்தலைவராக இருந்த கோவில்பட்டி கணேசன் 68, ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் கையாடல் செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில் 2012ல் அலுவலர் மணி இறந்து விட்டார். விசாரணைக்கு கணேசன் ஆஜரானார். இதில் கணேசனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற சிறப்பு நீதிபதி மோகன்ராம் தீர்ப்பளித்தார்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு