தொழில்நுட்ப பல்கலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரி பொறியியல் கல்லுாரி ஆசிரியர்கள் சங்க உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதுச்சேரி பொறியியல் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம், தலைமை செயலர், கல்வி செயலரை சந்தித்து, கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த சந்திப்புகளில், சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வந்த உள்ளிருப்புப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.

இதையடுத்து வகுப்புகள் வழக்கம் போல் இயங்கும். வரும் 16ம் தேதி புதுச்சேரி பொறியியல் கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் செயற்குழு மீண்டும் கூடி அன்றைய நிலைமைக்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளது.

Advertisement