மத போதகர் ஜாமின் மனு போலீஸ் பதிலளிக்க உத்தரவு
சென்னை:கிறிஸ்தவ மத பாடல்கள் வாயிலாக, சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான மத போதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். கோவையில், கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி, மத போதகராக செயல்பட்டு வருகிறார்.
2024 மே 21ம் தேதி, மதபோதகர் ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தன் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், 2 சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியர் அளித்த புகாரில், ஜான் ஜெபராஜ் மீது, கோவை காந்திபுரம் மகளிர் காவல் நிலையத்தில், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
ஜாமின் கோரி, ஜான் ஜெபராஜ் தாக்கல் செய்த மனு, நீதிபதி விக்டோரியா கவுரி முன், விசாரணைக்கு வந்தது. காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு