காரில் குட்கா கடத்திய 4 பேர் ஸ்ரீமுஷ்ணத்தில் கைது

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே 5 மூட்டை குட்கா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே தஞ்சாவூரான்சாவடி எல்லையில் இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது, அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் வழியாக ஸ்ரீமுஷ்ணம் நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 5 மூட்டைகள் குட்கா இருந்தது தெரிந்தது.
காரில் இருந்த அரியலுார் மாவட்டம், கூவத்துார் கிளிண்டன்ராஜ், 27; ஸ்ரீமுஷ்ணம் வெங்கடேசன்,48; ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், குட்கா கடத்தி வந்தது தெரிந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஆட்டோவில் குட்கா கடத்திச் சென்ற ஸ்ரீமுஷ்ணம் சுரேஷ், 30; மணிகண்டன், 29; ஆகியோரையும் போலீசார் பிடித்தனர்.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து வெங்கடேசன் உட்பட 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் 5 மூட்டைகளில் இருந்த 105 கிலோ குட்கா, 5 கிலோ கூல்லிப் மற்றும் குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
-
3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வாருங்கள்; பயணிகளுக்கு உத்தரவு