போரில் ஆர்வமில்லை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது; அதைச் செய்தோம். பயங்கரவாத முகாம்களை இலக்கு வைத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தி, அளவோடு கூடிய பதிலடி கொடுத்தோம். போரை துவங்க நாம் ஆர்வம் காட்டவில்லை.

சசி தரூர்

லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

பயங்கரவாதிகளின் கல்லறை!



பயங்கரவாதிகளின் பிரதேசமாக இருந்த பாகிஸ்தானை, நம் துணிச்சல் மிக்க முப்படைகளின் வீரர்கள் பயங்கரவாதிகளின் கல்லறையாக மாற்றியுள்ளனர். இந்தியாவை தொட முயற்சித்தால் அவர்களை பிரதமர் மோடி விடமாட்டார் என்பதை, பாகிஸ்தான் தலைவர்கள் உணர வேண்டும்.

முக்தர் அப்பாஸ் நக்வி

மூத்த தலைவர், பா.ஜ.,

மதத்திற்கு எதிரானது அல்ல!



'ஆப்பரேஷன் சிந்துார்' எனப்படும் பாகிஸ்தான் மீதான தாக்குதல், ஒரு நாட்டிற்கோ அல்லது ஒரு மதத்திற்கோ எதிரானது அல்ல. இதன் இலக்கு பயங்கரவாதம் மட்டுமே. பஹல்காமில் பயங்கரவாதிகள் செய்த கொடூர செயலுக்கு நாம் பழிவாங்கி உள்ளோம்.

பிரமோத் சாவந்த்

கோவா முதல்வர், பா.ஜ.,

Advertisement