தடுப்புச் சுவரில் மோதி லாரி விபத்து

கோபால்பட்டி: -திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து சிவகங்கை, காளையார்கோவிலுக்கு செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை காளையார்கோவிலை சேர்ந்த ராஜ்குமார் 48 என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை 1:00 மணி அளவில் லாரி நத்தம் ரோட்டில் கோபால்பட்டி கூட்டுறவு வங்கி முன்பு வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் முன்பக்கம் கடும் சேதமடைந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் இந்த தடுப்புச்சுவரில் மோதி 50க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை முற்றிலுமாக இடித்து அகற்ற வேண்டுமெனன பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement