'போக்சோ'வில் இருவர் கைது

வடமதுரை: திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் 22. இவர் சமூக வலைதளம் மூலம் வடமதுரை அருகே 14 வயது சிறுமியுடன் தங்கை எனக்கூறி பழகி மது போதையில்

அவரது வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். மற்றொரு சம்பவத்தில் எரியோடு ரைஸ் மில் தெருவை பகுதியைச் சேர்ந்த செல்வ கணபதி 29, 13 வயதான 2 சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இருவரையும் வடமதுரை மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisement